Language
அதிகரித்த நோயெதிர்ப்பு சக்திக்கு மஞ்சள் கலந்த பாலின் ஆரோக்கிய பலன்கள் மற்றும் அதைத் தயார் செய்வது எப்படி
Table of Contents
- முன்னுரை
- ஊட்டச்சத்து தகவல்
- மஞ்சள் கலந்த பாலின் 11 ஆரோக்கிய பலன்கள்
- சக்திவாய்ந்த ஆன்டிஅக்சிடென்ட்
- இன்ஃப்ளமேஷனைக் குறைகிறது
- நோயெதிர்ப்பு அதிகரிப்பான்
- இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது
- புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கிறது
- இருதய நோய் ஆபத்தைக் குறைக்கிறது
- செரிமானத்தை மேம்படுத்துகிறது
- நியாபகசக்தி மற்றும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது
- மஞ்சளில் உள்ள குர்குமின் மனநிலையை சீர்படுத்துகிறது
- சருமத்திற்குச் சிறந்தது
- எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
- மஞ்சள் கலந்த பாலை எப்படித் தயார் செய்வது?
- முடிவுரை
முன்னுரை
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழியின் தத்துவத்தை, தற்போதைய உலகளாவிய சுகாதாரப் பிரச்சனை நிகழும்போது மறுக்கவே முடியாது. முன்னெப்போதும் இல்லாத அளவு, நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே நமது அன்றாட வாழ்வின் முக்கிய நோக்கமாக இப்போது மாறிவிட்டது. அத்தகைய நோக்கத்தை சுலபமாக அடைவதற்கான மிகச்சிறந்த தீர்வாக நமது இந்தியக் குடும்பங்களில் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தப்படுவது மஞ்சள் கலந்த பாலாகும்! “கோல்டன் மில்க்” என்று அழைக்கப்படும் இது என்ன மற்றும் இதன் ஆரோக்கிய பலன்கள் யாவை? அனைத்தையும் அறிந்துகொள்வோம், வாருங்கள்.
ஊட்டச்சத்து தகவல்
‘கோல்டன் மில்க்’ எனவும் அறியப்படும் ‘மஞ்சள் கலந்த பால்’ என்பது பசுவின் அல்லது தாவர மூலத்தின் மூலம் பெறப்படும் பாலில், மஞ்சள் மற்றும் பட்டை, இஞ்சி போன்ற பிற மசாலா பொருட்களைச் சேர்த்து, காய்ச்சித் தயார் செய்யப்படும் பாரம்பரிய இந்திய பானமாகும். இந்தப் பிரகாசமான மஞ்சள் வடிச்சாறை, அதிலுள்ள அதிக ஊட்டச்சத்துக்களின் காரணமாக, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இருந்து வருகிறது.
ஒரு கப் வெதுவெதுப்பான மஞ்சள் கலந்த பால் அருந்துவதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய சில முக்கிய ஊட்டச்சத்துக்களின் பட்டியல் இதோ:
- ஆன்டிஆக்சிடென்ட்கள்
- இன்ஃப்ளமேஷன் எதிர்ப்பு காம்பவுண்ட்கள்
- வைட்டமின்கள்
- தாதுச் சத்துக்கள்
- அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள்
- நார்ச்சத்து
மஞ்சள் கலந்த பாலில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களை அறிந்துகொண்ட நாம், இப்போது அதன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அறிந்துகொள்வோம்.
மஞ்சள் கலந்த பாலின் 11 ஆரோக்கிய பலன்கள்
மஞ்சள் கலந்த பால், அதன் அபாரமான ஆரோக்கிய-அதிகரிப்பு குணங்களின் காரணமாக, ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. ‘கோல்டன் மில்க்’ எனப்படும் இதில் மஞ்சளின் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஆன்டிஅக்சிடென்ட் குணங்களுடன் பாலின் இனிப்பான சுவையும் மிகுந்துள்ளது. அதனால் இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், உடல் நலத்திற்கும் உகந்ததாகும்.
சக்திவாய்ந்த ஆன்டிஅக்சிடென்ட்
மஞ்சள் கலந்த பாலில் உள்ள முக்கிய மூலப்பொருள் குர்குமின் ஆகும், இது மஞ்சளில் உள்ள ஒருவகை ஆக்டிவ் காம்பவுண்ட் ஆகும். இதிலுள்ள சக்திவாய்ந்த ஆன்டிஅக்சிடென்ட் நற்குணங்கள், உங்கள் உடலின் அணுக்களை அக்சிடெட்டிவ் அழுத்தம் மற்றும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. அத்துடன், பெரும்பாலான மஞ்சள் கலந்த பால் ரெசிபிகளில் பட்டை மற்றும் இஞ்சி போன்றவை சேர்க்கப்படுகின்றன - இவை இரண்டிலும் அதிகமான ஆன்டிஅக்சிடென்ட் நற்குணங்கள் நிறைந்துள்ளன.
இன்ஃப்ளமேஷனைக் குறைகிறது
மஞ்சள் கலந்த பாலில் உள்ள கூறுகள் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு நற்குணங்களைக் கொண்டுள்ளன. நாள்பட்ட இன்ஃப்ளமேஷனானது புற்றுநோய், வளர்சிதை மாற்ற நோய்க்குறி, அல்சைமர் நோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல நோய்களால் ஏற்படுகிறது. மஞ்சள் கலந்த பாலின் அழற்சி எதிர்ப்பு குணங்கள் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதத்தால் ஏற்படும் மூட்டு வலியைக் குறைக்கிறது.
நோயெதிர்ப்பு அதிகரிப்பான்
உங்களுக்கு எப்போதெல்லாம் ஜலதோஷம் பிடிக்கிறதோ, அப்போதெல்லாம் உங்கள் பாட்டி ஒரு கிளாஸ் சூடான மஞ்சள் கலந்த பால் அருந்த வேண்டும் என ஏன் வலியுறுத்தினார்கள் என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஏனென்றால் மஞ்சள் கலந்த பால், நமது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு பல வழிகளில் ஆரோக்கியம் தருகிறது. குர்குமினில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு நற்குணங்கள் தொற்றுநோய்களை எதிர்க்கவும், தடுத்துப் போராடவும் உதவுகின்றன. மேலும், புதிதாக துருவப்பட்ட இஞ்சியில் உள்ள காம்பவுண்ட்கள் சில, கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது
கோல்டன் மில்க்கில் உள்ள பொருட்கள், குறிப்பாக இஞ்சி மற்றும் பட்டை, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. உங்கள் உணவில் தொடர்ந்து சிறிய அளவு இஞ்சியைச் சேர்ப்பது உண்ணா இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவுவதுடன் மஞ்சள் கலந்த பாலின் ஆரோக்கிய பயன்களை அதிகரிக்கும்.
புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கிறது
மஞ்சளில் உள்ள சக்திவாய்ந்த காம்பவுண்ட் ஆன குர்குமின், மஞ்சள் கலந்த பாலை நீங்கள் அருந்துவதால் உங்களின் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கிறது. குர்குமினின் உள்ள ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஆன்டிஆக்சிடென்ட் நற்குணங்கள் உங்கள் உடலின் அணுக்களைச் சேதத்திலிருந்து பாதுகாக்கவும், புற்றுநோய் அணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவுகின்றன, இதனால் இது ஒரு சக்திவாய்ந்த மற்றும் புற்றுநோய் தடுப்பு பானமாக அமைகிறது. இருப்பினும், இத்தகைய நற்குணங்களை உறுதிப்படுத்துவதற்குக் கூடுதல் ஆராய்ச்சி தேவை.
இருதய நோய் ஆபத்தைக் குறைக்கிறது
மஞ்சள் கலந்த பால் அருந்துவது இருதயத்தைப் பாதுகாக்கும் விளைவுகளை ஏற்படுத்தும். மஞ்சளில் உள்ள குர்குமின், எண்டோதிலியல் செயல்பாட்டை மேம்படுத்தி, சிறந்த வாசோடைலேஷனுக்கு வழிவகுப்பதன் மூலம், இருதயச் சுவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த செயல்பாடு உடற்பயிற்சி செய்வது அல்லது சில மருந்துகளை உட்கொள்வது போலவே இருதயத்திற்கு பயனுள்ளதாக இருப்பதால் மஞ்சள் இயற்கையாகவே இருதயத்திற்கு சிறந்த நண்பனாகக் கருதப்படுகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
நீங்கள் அடிக்கடி செரிமான பிரச்சினைகள் அல்லது வயிற்று உபசத்தால் அவதிப்பட்டால், மஞ்சள் கலந்த பாலை அருந்துவது சிறந்த நிவாரணியாக இருக்கும். மஞ்சள் பித்த உற்பத்தியைத் தூண்டி கொழுப்பு செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. கோல்டன் மில்க் ரெசிபியின் பொதுவான மூலப்பொருளான இஞ்சி, செரிமானத்தை விரைவுபடுத்தி வயிற்றுக் கழிவுகளை அப்புறப்படுத்த உதவுகிறது மற்றும் அஜீரண குறைபாடுகள் ஏற்படுவதையும் குறைக்கிறது.
நியாபகசக்தி மற்றும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது
மஞ்சள் கலந்த பால் உங்கள் மூளைக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குர்குமின் மூளையில் இருந்து பெறப்பட்ட நியூரோட்ரோபிக் காரணியை (BDNF) அதிகரிக்கிறது. இது உங்கள் மூளையில் புதிய நரம்பியல் இணைப்புகளை உருவாக்க உதவும் வளர்ச்சி ஹார்மோனின் ஒரு வகையாகும். BDNF இன் அதிகரித்த அளவுகள் நியாபகசக்தியை மேம்படுத்துவதுடன், மூளை நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது எனவும் ஆராய்ச்சி நிரூபிக்கின்றது.
மஞ்சளில் உள்ள குர்குமின் மனநிலையை சீர்படுத்துகிறது
திடீர் மனநிலை மாற்றங்களால் அவதிப்படுகிறீர்களா அல்லது எப்போதும் சோகமாகவே உணர்கிறீர்களா? ஒரு கிளாஸ் சூடான மஞ்சள் கலந்த பாலை நீங்கள் நிச்சயமாக அருந்தவேண்டும். குர்குமின் மனஅழுத்த எதிர்ப்பு நற்குணங்களைக் கொண்டுள்ளதுடன், செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற மனநிலையை ஒழுங்குபடுத்தும் நரம்பியக்கடத்திகளை அதிகப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
சருமத்திற்குச் சிறந்தது
மஞ்சளின் ஆன்டி-ஆக்சிடென்ட் மற்றும் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி நற்குணங்கள் உங்கள் சருமம் இயற்கையான பளபளப்பையும், பொலிவையும் பெறுவதை உறுதிசெய்யும். மஞ்சள் கலந்த பாலை தொடர்ந்து அருந்துவது சரும சிவத்தல் மற்றும் இன்ஃப்ளமேஷனைக் குறைத்து, முகப்பருவை குணமடையச்செய்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
மஞ்சள் கலந்த பாலில் உள்ள அதிக கால்சியச்சத்து உங்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகமுக்கிய பங்காற்றுகிறது. இது எலும்புகளை வலுப்படுத்தி, அடர்த்தியை மேம்படுத்தி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய் பாதிப்பைத் தடுக்கிறது.
மஞ்சள் கலந்த பாலை எப்படித் தயார் செய்வது?
நீங்கள் இந்த அதிசய வடிச்சாற்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கக்கூடும், ஆனால், இதை எப்படி தயார் செய்வது என்பது பற்றி உங்களுக்குச் சரியாக தெரியாமல் இருக்கலாம். கவலையைவிடுங்கள்! மஞ்சள் கலந்த பாலை தயார் செய்வது மிகவும் சுலபம். மேலும், அதைத் தயார் செய்ய ஒரு சில பொதுவான சமையல் பொருட்களே போதுமானது.
மஞ்சள் கலந்த பாலை எப்படி தயார் செய்வது என்பதை விளக்கும் படிப்படியான செய்முறை கையேடு இதோ:
- தேவையான பொருட்களை சேகரிக்கவும்: 1 கப் பால் (பசும்பால் அல்லது தாவர மூலத்தின் மூலம் பெறப்பட்ட பால்), 1 தேக்கரண்டி அரைத்த மஞ்சள், ½ தேக்கரண்டி அரைத்த பட்டை, ஒரு சிட்டிகை கருப்பு மிளகுத்தூள், 1 தேக்கரண்டி தேன் அல்லது வெல்லம், மற்றும் ½ தேக்கரண்டி புதிதாக துருவப்பட்ட இஞ்சி(விருப்பமிருந்தால்) ஆகியவற்றை சேகரிக்கவும்.
- பாலை சூடாக்கவும்: பாலை ஒரு சிறிய சட்டியில் சேர்த்து, மிதமான சூட்டில் அது வெதுவெதுப்பாகும் வரை சூடேற்றவும். ஒருபோதும் பாலைக் கொதிக்கவிட வேண்டாம்.
- மசாலா பொருட்களைச் சேர்க்கவும்: மஞ்சள், பட்டை, கருப்பு மிளகு மற்றும் இஞ்சி (பயன்படுத்தினால்) ஆகியவற்றைச் சேர்க்கவும். அனைத்தும் ஒன்றாக சேர நன்கு கலக்கவும்.
- மிதமான சூட்டில் வைக்கவும்: தீயைக் குறைத்து, அதை 5-10 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் வைத்தபடி அவ்வப்போது கிளறிவிடவும்.
- இனிப்பு சேர்க்கவும்: சூட்டில் இருந்து நீக்கிவிட்டு, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேன் அல்லது வெல்லம் சேர்த்துக் கிளறவும்.
- வடிகட்டிவிட்டு அருந்தவும்: இஞ்சி அல்லது வேறேதேனும் மசாலா பொருட்களை நீக்க, பாலை ஒரு கப்பினுள் வடிகட்டவும். முழுமையான ஆரோக்கிய பலன்கள் பெற மஞ்சள் கலந்த பாலை வெதுவெதுப்பாக அருந்தவும்!
முடிவுரை
ஆன்டிஆக்சிடென்ட்களைக் கொண்டிருப்பது முதல், இன்ஃப்ளமேஷனைக் குறைத்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை, மஞ்சள் கலந்த பாலில் எண்ணற்ற ஆரோக்கிய பலன்கள் உள்ளது! உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பலமடங்கு மேம்படுத்தக்கூடிய இந்த ஆரோக்கிய பானத்தை உங்கள் அன்றாட வாழ்வில் சேர்த்துக்கொள்வது மிகவும் சுலபமானது. மஞ்சள் கலந்த பாலில் பல மருத்துவ நற்குணங்கள் இருப்பினும், அது ஒருபோதும் மருத்துவரின் பரிந்துரை மற்றும் சிகிச்சைக்கு ஈடாகாது என்பதைத் தெளிவாக புரிந்துகொள்ளவும்.
ஒருவேளை, நீங்கள் தனிப்பட்ட மருத்துவ ஆலோசனை அல்லது நோய் கண்டறிதல் சேவையைப் பெற விரும்பினால், உங்களுக்குச் சேவைசெய்ய மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் காத்திருக்கிறது.நீங்கள் வீட்டிலில் வசதியாக இருந்தபடியே இரத்த மாதிரியைச் சேகரிப்பதன் மூலம், நாங்கள் துல்லியமான நோய் கண்டறிதல் பரிசோதனை மற்றும் உடல்நலப் பரிசோதனை சேவைகளை வழங்குகிறோம். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்துவதற்குத் தேவையான நம்பகமான பரிசோதனை முடிவுகளையும், பிரத்யேக தனிப்பட்ட கவனிப்பையும் பெற எங்களை முழுமையாக நம்புங்கள்.
சுவையான மஞ்சள் கலந்த பாலை தினமும் அருந்தி ஆரோக்கியமாக வாழ்ந்திடுங்கள்!









