Language
டெஸ்டோஸ்டீரோன் அளவை இயற்கையாகவே அதிகரிக்க உதவும் 10 சிறந்த உணவுகள் (சூப்பர்-ஃபுட்ஸ்)

Table of Contents
டெஸ்டோஸ்டீரோன் வெறும் பாலியல் ஹார்மோன் என்பதுடன் உடல் ஆரோக்கியத்திற்கான பல சிறப்பு குணங்களைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? டெஸ்டோஸ்டீரோன் உங்கள் உடலை வலுவாக, ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.
நீங்கள் உட்கொள்ளும் உணவு மூலம் உங்களுக்குப் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காதபட்சத்தில், உங்கள் டெஸ்டோஸ்டீரோன் அளவு குறையக்கூடும். அதனால் நீங்கள் சோர்வாக உணர்வதுடன், வலுவான உடல் தசைகள் உங்கள் உடலில் உருவாகுவதும் கடினமாகிறது, மற்றும் நீங்கள் சுலபமாக நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. இத்தகைய மந்தமான உடல்நிலை ஏற்படாமல் இருப்பதைத் தவிர்க்க, டெஸ்டோஸ்டீரோன் அளவை இயற்கையாகவே அதிகரிக்க நீங்கள் உண்ண வேண்டிய சில சிறப்பான உணவுகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.
நீங்கள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க உதவுவதுடன், உங்கள் டெஸ்டோஸ்டீரோன் அளவை இயற்கையாகவே அதிகரிக்க உதவும் பத்து சிறந்த உணவுகள் (சூப்பர்-ஃபுட்ஸ்) பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
டெஸ்டோஸ்டீரோன் அளவை இயற்கையாகவே அதிகரிக்க உதவும் பத்து உணவுகளின் பட்டியல்
நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் டெஸ்டோஸ்டீரோன் அளவை அதிகரிக்கும் முதல் பத்து உணவுகளின் பட்டியல் இதோ:
1. அவகேடோ பழங்கள்
2. பெர்ரி பழங்கள் மற்றும் செர்ரி பழங்கள்
3. பச்சை மற்றும் இலை காய்கறிகள்
4. இஞ்சி
5. வெங்காயம்
6. பால் பொருட்கள்
7. கடல் மீன்கள்
8. மாதுளை பழங்கள்
9. முட்டைகள்
10. ஆலிவ் எண்ணெய்l
1. அவகேடோ பழங்கள்
ஒரே ஒரு ஸ்கூப் அவகேடோ, போரான் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கிய உணவாகும். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஏற்ற அவகேடோ பழமானது, இயற்கையாகவே டெஸ்டோஸ்டீரோனை அதிகரிக்கும் சூப்பர் ஃபுட்களில் ஒன்றாகும். டெஸ்டோஸ்டீரோன் உட்பட பல பாலியல் ஹார்மோன்களின் அளவை அதிகரிப்பதற்கு போரான் ஒரு சிறந்த ஊட்டச்சத்தாகும். உங்கள் டெஸ்டோஸ்டீரோன் அளவை அதிகரிக்க அவகேடோ பழத்தை உண்பது பாதுகாப்பானது என்றாலும்கூட, உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் போரான் சப்ளிமெண்ட் மருந்துகள் எடுத்துக்கொள்வதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடுங்கள்.
2. பெர்ரி பழங்கள் மற்றும் செர்ரி பழங்கள்
ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ள பெர்ரி பழங்கள் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் உடல் பருமனால் ஏற்படும் இன்ஃப்ளமேஷன் எனப்படும் அலர்சியினால் உருவாகக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. பெர்ரி மற்றும் செர்ரி பழங்களில் ஃபிளாவனாய்டு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகமாக உள்ளன, அதன் காரணமாக அவை அழற்சி எதிர்வினைகளிலிருந்து லேடிக் செல்களைப் பாதுகாப்பதன் மூலம் டெஸ்டோஸ்டீரோனை அதிகரிக்கும் சிறந்த உணவுகளாகக் கருதப்படுகின்றன. பெர்ரி பழங்களை நீங்கள் உட்கொள்ள விரும்பும் விதத்தில் அவற்றை பழங்களாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக்கொள்ளலாம். முடிந்தளவு செயற்கையாக பேக் செய்யப்பட்ட தயாரிப்புகளைக் காட்டிலும் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பழங்களை உண்ணுங்கள்.
3. பச்சை மற்றும் இலை காய்கறிகள்
எண்ணற்ற நுண்ணூட்டச்சத்துக்களை அதிகமாக கொண்டுள்ள இலை காய்கறிகளான ப்ரோக்கோலி, காலே மற்றும் கீரை போன்றவை டெஸ்டோஸ்டீரோன் அளவை அதிகரிக்க அவசியமாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளாகும். அவற்றில் அதிக அளவு மெக்னீசிய ஊட்டச்சத்து உள்ளது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களை சமன் செய்வதோடு டெஸ்டோஸ்டீரோன் அளவை அதிகரிக்கும் சிறந்த உணவாகவும் அறியப்படுகின்றன.
4. இஞ்சி
தினமும் உட்கொள்வதால் டெஸ்டோஸ்டீரோன் அளவை கணிசமாக அதிகப்படுத்தும் உணவுகளில் ஒன்றாக இஞ்சி உள்ளது. எண்ணற்ற குணப்படுத்தும் மருத்துவ குணங்களைக் கொண்ட இஞ்சி, ஆரோக்கியமான விந்தணு உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமான அதிகளவு டெஸ்டோஸ்டீரோனை உற்பத்தி செய்ய உதவுகிறது.
நீங்கள் இஞ்சியை சமைக்கும்போது விழுதாகவோ அல்லது ஹெர்பல் டீயில் கலந்து கொதிக்க வைத்து குடிப்பதன் மூலமாகவோ எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக, இஞ்சியின் அதிகபட்ச செயல்திறனைப் பெறுவதற்குப் பேக் செய்யப்பட்ட இஞ்சி பொருட்களைக் காட்டிலும் ஃப்ரேஷானவற்றைப் பயன்படுத்துங்கள்.
5. வெங்காயம்
பெரும்பாலும் பாலுணர்வைத் தூண்டும் உணவாகக் கருதப்படும் வெங்காயம், இயற்கையாகவே டெஸ்டோஸ்டீரோன் அளவை அதிகரிக்கும் உணவுகளில் ஒன்றாகும். ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகம் நிறைந்த உணவான வெங்காயங்கள், வயதுமூப்பு எதிர்ப்பு மற்றும் புத்துணர்ச்சியூட்டும் குணங்களைக் கொண்டிருப்பதோடு, ஆணுறுப்புக்கு சிறந்த விறைப்புத்தன்மை செயல்பாட்டையும் வழங்குகின்றன.
வெங்காயங்கள் இன்ஃப்ளமேஷனை எதிர்க்கும் குணங்களை கொண்டிருக்கின்றன, அதாவது அதிக அளவிலான ஃப்ரீ ரேடிக்கல் உங்கள் டெஸ்டோஸ்டீரோன் அளவை பாதிப்பதிலிருந்து பாதுகாக்கின்றன. நீங்கள் வெங்காயத்தை பச்சையாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது சாலட் செய்து சாப்பிடலாம் அல்லது சமைத்த உணவுகளின் ஒரு அங்கமாக அவற்றை உட்கொள்ளலாம்.
6. பால் பொருட்கள்
டெஸ்டோஸ்டீரோனை அதிகப்படுத்தும் மிக சிறந்த உணவுகளில் ஒன்றான பால் பொருட்கள், கால்சியம் மற்றும் விட்டமின் டி போன்ற அவசியமான ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. எனினும், நீங்கள் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவராகவோ அல்லது சைவம் சாப்பிடுபவராகவோ இருந்தால், உங்கள் அன்றாட ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்திசெய்ய தாவரங்கள் மூலம் பெறும் பால் மற்றும் பால் பொருட்களை உண்ணலாம்.
மேலும், பால் முழுமையான ஊட்டச்சத்து உணவாக பலகால ஆண்டுகளாக அறியப்படுகின்றது.பால் பொருட்களை தினமும் உட்கொள்வது உங்கள் தினசரி நுண்ணூட்டச்சத்துக்களை பூர்த்தி செய்து, விந்தணுக்களின் வீரியம் மற்றும் ஆண்மைக்கு அவசியமாகிறது.
7. கடல் மீன்கள்
சமச்சீர் உணவு முழுவதும் சேர்க்கப்பட வேண்டிய பல்வேறு நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள கடல் மீன்கள் உணவில் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை. ஹில்சா, பாம்ஃப்ரெட் மற்றும் சார்டின் போன்ற கடல் மீன்களில் அதிக கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் (A, D), மற்றும் துத்தநாகம் உள்ளது. இதன் காரணமாக கடல் மீன்கள் டெஸ்டோஸ்டீரோனை அதிகரிக்கும் அத்தியாவசிய உணவுகளில் ஒன்றாகும்.
அத்துடன், அதிக ஊட்டச்சத்து நிறைந்துள்ள மீன் எண்ணெய் உள்ள கொழுப்பு நிறைந்த கடல் மீன்களை உண்ண முன்னுரிமை அளித்திடுங்கள்.
8. மாதுளை பழங்கள்
இயற்கையாக பாலுணர்வைத் தூண்டும் மற்றொரு உணவான மாதுளை, விறைப்புத்தன்மை பிரச்சினைகளை சரிசெய்ய பழங்காலம் முதல் பயன்படுத்தப்படும் தீர்வாகும். மாதுளையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது ஆண்மையைப் பராமரிக்க மற்றொரு அத்தியாவசிய காரணியான இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது.
தினமும் சாப்பிட்டால் டெஸ்டோஸ்டீரோனை அதிகரிக்க உதவும் உணவாக மாதுளை பழங்கள் கருதப்படுகின்றன. ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ள மாதுளை, வயதுமூப்பு எதிர்ப்பு, குறைவான இரத்த அழுத்தம் மற்றும் RBC எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதுடன் ஃப்ரீ ரேடிக்கல்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. குறிப்பாக, பாட்டில்களில் உள்ள மாதுளைச்சாறு அல்லது மாதுளைச்சாற்றைவிட நேரடியாக ஃப்ரேஷ் மாதுளை பழங்களைச் சாப்பிடுங்கள்.
9. முட்டைகள்
முழுமையான புரோட்டீன் உணவான முட்டைகளில் HDL, வைட்டமின்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதுள்ளன. இதனால் இது இயற்கையாகவே டெஸ்டோஸ்டீரோன் அளவை அதிகரிக்க எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய சிறந்த உணவாக உள்ளது. எடை அதிகரிக்காமல் உங்கள் உடல் தசைகளை இயற்கையாகவே உருவாக்க முட்டைகள் உதவுகின்றன. அத்துடன் முட்டையில் உள்ள செலினியம் டெஸ்டோஸ்டீரோன் அளவை அதிகரிக்கும் ஒரு சிறந்த ஆன்டி-ஆக்சிடென்ட் ஆகும்.
10. ஆலிவ் எண்ணெய்
ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவுகளில் ஒன்றான ஆலிவ் ஆயில், டெஸ்டோஸ்டீரோன் அளவை அதிகப்படுத்த அவசியம் உட்கொள்ள வேண்டிய உணவாகும். அதிலுள்ள விரிவான மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (MUFA), ஆலிவ் எண்ணெயை சீரான இதய ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக ஆக்குகின்றன. குறிப்பாக, வைட்டமின்கள் E மற்றும் K போன்ற மேம்பட்ட நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள எக்ஸ்ட்ரா-விர்ஜின் ஆலிவ் எண்ணெயே உட்கொள்ள சிறந்த தேர்வாகும்.
முடிவுரை
டெஸ்டோஸ்டீரோன் குறைபாடு குறுகியகால நோய் தாக்கம், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கைமுறை மற்றும் வயதுமூப்பு காரணமாக ஏற்படலாம். தற்காலிகமாக ஏற்பட்டுள்ள டெஸ்டோஸ்டீரோன் குறைபாட்டை மேலே கொடுக்கப்பட்டுள்ள 10 உணவுகளை தினமும் உட்கொள்வதன் மூலம் நிச்சயமாக சரிசெய்யலாம். காரணம் இல்லாமல் ஏற்படும் உடல் சோர்வு மற்றும் ஆண்மை குறைபாட்டைப் பற்றி அறிந்துகொள்ள உங்கள் தற்போதைய ஹார்மோன் அளவுகளை சரிபார்க்க மருத்துவரை கலந்தாலோசியுங்கள்.
உங்களுக்குக் காரணம் எதுவும் இல்லாமல் தொடர்ச்சியாக உடல் சோர்வு ஏற்படுகிறதா? அத்தகைய மந்தமான சோர்வு நிலையை ஏற்படுத்தும் காரணத்தை அறிந்துகொள்ள, உங்கள் மருத்துவர் டெஸ்டோஸ்டீரோன் கண்டறிதல் பரிசோதனையை நீங்கள் செய்துகொள்ள பரிந்துரைக்கலாம். டெஸ்டோஸ்டீரோன் அளவை அதிகப்படுத்தும் உணவுகளை உண்பதோடு, உங்கள் தற்போதைய டெஸ்டோஸ்டீரோன் அளவை அறிந்துகொள்ள நீங்கள் பரிசோதனை ஒன்றை செய்துகொள்ளுங்கள். மெட்ரோபோலிஸ் லேப் சிறந்த நோய் கண்டறிதல் டீல்களை வழங்குவதுடன், உங்கள் வீட்டு வாசலிலேயே விந்தணு திரவ மாதிரிகளை சேகரிக்க இந்தியா முழுவதும் தகுதிவாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டுள்ளது. வீட்டிலிருந்தபடியே விந்தணு திரவ மாதிரி சேகரிப்புக்கு, இன்றே உங்கள் பகுதியிலுள்ள மெட்ரோபோலிஸ் லேப்பை தொடர்புகொள்ளுங்கள்!