Language
CBC பரிசோதனை: CBC என்றால் என்ன மற்றும் அதற்கு எப்படித் தயாராகுவது?

Table of Contents
CBC பரிசோதனை என்றால் என்ன?
கம்ப்ளீட் ப்ளட் கவுண்ட் (CBC) பரிசோதனை என்றும் அழைக்கப்படும் CBC பரிசோதனை என்பது உங்கள் இரத்தத்தில் உள்ள வெவ்வேறு வகையான அணுக்களின் அளவை அறிந்துகொள்ள மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனையாகும். இந்தப் பரிசோதனை உங்கள் இரத்தத்தில் உள்ள சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள், ஹீமோகுளோபின் மற்றும் பிளேட்லேட் அளவுகளை அறிந்துகொள்ள உதுவுகிறது. இந்தப் பரிசோதனை இரத்தசோகை, இரத்தத்திலுள்ள தொற்றுநோய்கள் மற்றும் புற்றுநோய்கள் உட்பட பல நோய்நிலைகளைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் புற்றுநோய், நீரிழுவு, அல்லது AIDS போன்ற நாள்பட்ட நோய்நிலைகளால் பாதிக்கப்பட்ட நபர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் உதவுகிறது.
உங்களுக்கு CBC பரிசோதனை செய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டால், நீங்கள் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. பரிசோதனை செயல்முறை மிகவும் எளிதானது மற்றும் அதை செய்துமுடிக்க ஒரு சில நிமிடங்கள் மட்டுமே எடுக்கும். இந்தப் பரிசோதனையில் சுகாதார நிபுணர் ஒரு ஊசி மூலமாக உங்களின் சிறிதளவு இரத்தத்தைச் சேகரிப்பார். அதன்பின் கேகரிக்கப்பட்ட உங்களின் இரத்த மாதிரியானது ஆய்வுக்கு உட்படுத்தப்பட லேப்பிற்கு அனுப்பப்படும். CBC பரிசோதனையின் முடிவுகள் பொதுவாக ஒரு சில நாட்களிலேயே கிடைத்துவிடும்.
CBC பரிசோதனை செய்வதற்கான நோக்கம் என்ன?
CBC பரிசோதனை உங்களின் ஒட்டுமொத்த உடல்நலத்தை மதிப்பிடவும், பல தரப்பட்ட நோய் கோளாறுகளைக் கண்டறியவும் உதவுகிறது. இந்தப் பரிசோதனை பொதுவாக வழக்கமான உடல்நலப் பரிசோதனையின்போது அல்லது உங்கள் இரத்த அணுக்களைப் பாதிக்கும் நோய் நிலை உங்களுக்கு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் வெளிப்படும்போது மேற்கொள்ளப்படுவதற்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, காய்ச்சல், உடல் சோர்வு, அல்லது மூச்சுத் திணறல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளால் நீங்கள் பாதிக்கப்படும்போது, உங்கள் மருத்துவர் உங்களை CBC பரிசோதனை மேற்கொள்ளும்படி பரிந்துரைக்கலாம். கூடுதலாக, உங்கள் இரத்த அணுக்களைப் பாதிக்கக்கூடிய மருந்துகளை நீங்கள் உட்கொள்ளும்பட்சத்தில், உங்களின் உடல்நலத்தை கண்காணிக்கவும் இப்பரிசோதனைச் செய்யப்படலாம்.
CBC பரிசோதனைக்கு எப்படித் தயாராகுவது?
CBC பரிசோதனை செய்துகொள்ள உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டால், நீங்கள் அதற்காக எவ்வித சிறப்பு முன்னேற்பாடுகளளையும் செய்யத்தேவையில்லை. இருப்பினும், சேகரிக்கப்படும் இரத்த மாதிரி வேறு சில பரிசோதனைகளுக்கும் எடுத்துக்கொள்ளப்படும் என்றால், இப்பரிசோதனையைச் செய்துகொள்வதற்கு 12 மணிநேரத்திற்கு முன்பிலிருந்து உண்ணாமல் இருக்க வேண்டும். அத்தகைய நேரத்தில், நீங்கள் தண்ணீர் மட்டுமே அருந்த முடியும். அத்துடன், பரிசோதனைக்கு முன்னர் நீங்கள் கடினமான உடலுழைப்புள்ள செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. அதாவது, இந்தப் பரிசோதனையை காலையில் நீங்கள் எழுந்தஉடனேயே செய்துகொள்வது நல்லது. இருப்பினும், நீங்கள் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளும் முன்னர் உண்ணாமல் இருக்க வேண்டுமா இல்லையா என உங்கள் மருத்துவர் ஆலோசனை வழங்குவார்.
CBC பரிசோதனை செய்துகொள்ள முன்பதிவு செய்யும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் பின்வரும் உடல்நிலைகளைப் பற்றி அறிவிப்பது அவசியமாகும்:
· கர்பமாக இருத்தல்
· இதற்குமுன் இரத்தப்போக்குப் பிரச்சனைகளுக்கு ஆளாகியிருத்தல்
· ஓவர்-தி-கவுண்டர் மருந்துகள் மற்றும் சப்ளிமெண்ட் மருந்துகள் என ஏதேனும் மருந்துகளை எடுத்துக்கொண்டிருத்தல்
இம்மாதிரியான இரத்தப் பரிசோதனை பொதுவாக வழக்கமான உடல்நலப் பரிசோதனையின்போது செய்துகொள்ளப்படுகிறது. பரிசோதனை செயல்பாடு முழுவதுமே விரைவாகவும், சிக்கனமானதாகவும் இருக்கும். நீங்கள் இப்பரிசோதனையைச் செய்துகொள்ள அருகிலுள்ள லேபிற்குச் செல்லலாம் அல்லது வீட்டில் வசதியாக இருந்தபடியே உங்கள் இரத்த மாதிரியைச் சேகரிக்க சுகாதார நிபுணர்களை வரவைக்கலாம்.
இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வதற்கு முன் நீங்கள் ஒரு சில மருந்துகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களின் தற்போதைய உடல்நிலைக்கு ஏற்ப, நீங்கள் CBC பரிசோதனை செய்துகொள்வதற்கு எப்படித் தயாராக வேண்டும் என்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை உங்கள் மருத்துவர் உங்களுக்கு வழங்குவார்.
CBC பரிசோதனை முடிவுகளின் இயல்பான மதிப்புகள் என்னென்ன?
CBC பரிசோதனை முடிவுகளின் இயல்பான மதிப்புகள் பரிசோதனை செய்துகொள்ளும் நபரின் வயது மற்றும் பாலினத்தின் அடிப்படையில் மாறுபடும். பொதுவாக, ஆண்களுக்குப் பெண்களைக் காட்டிலும் இரத்தத்தில் அதிக சிவப்பு அணுக்கள் இருக்கும், அதேபோல் குழந்தைகளின் இரத்தத்தில் பெரியவர்களைவிட அதிக வெள்ளை இரத்த அணுக்கள் இருக்கும்.
கீழே உள்ள பட்டியல் ஆண்கள் மற்றும் பெண்களிடையே CBC பரிசோதனைக்கான இயல்பான மதிப்புகளைக் காட்டுகிறது. இருப்பினும், மதிப்புகள் மாறுபடலாம் என்பதை நினைவில்கொள்ளுங்கள், மேலும் பரிசோதனை மதிப்புகளின் அடிப்படையில் எவ்வித அனுமானங்களைச் செய்வதற்கு முன்னர் மருத்துவரை கலந்தாலோசிப்பது மிகவும் அவசியமாகும்.
ஹீமோகுளோபின்
ஆண்கள்: 13.2 - 16.2 gm/dL | பெண்கள்: 12.0 - 15.2 gm/dL
சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை (RBC)
ஆண்கள்: 4.3 - 6.2 மில்லியன்/μL | பெண்கள்: 3.8 - 5.5 மில்லியன்/μL | பச்சிளங்குழந்தை/குழந்தை: 3.8 - 5.5 மில்லியன்/μL
வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை (WBC) - வேறுபட்ட வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை
· நியூட்ரோபில்கள் - 35-80%
· லிம்போசைட்டுகள் - 20-50%
· மோனோசைட்டுகள் - 2-12%
· ஈசினோபில்கள் - 0-7%
· பசோபில்கள் - 0-2%
பிளேட்லெட் எண்ணிக்கை (Plt) - 1.5-4.5 லட்சம்/லிட்டர்
ஹீமாடோக்ரிட் (Hct)
ஆண்கள்: 40-52% | பெண்கள்: 37-46% | குழந்தை: 31-43%
சிவப்பு இரத்த அணுக்கள் பரவல் அகலம் (RDW) - 35-47 fL
சராசரி கார்பஸ்குலர் அளவு (MCV)
ஆண்கள்: 82-102 fL | பெண்கள்: 78-101 fL
சராசரி கார்பஸ்குலர் ஹீமோகுளோபின் (MCH) - 27-34 pg
சராசரி கார்பஸ்குலர் ஹீமோகுளோபின் கான்சென்ட்ரேஷன் (MCHC) - 31-35 கிராம்/dL
சராசரி பிளேட்லெட் அளவு (MPV) - 6.0-9.5 fL
பரிசோதனை முடிவுகள் இயல்பாக இல்லை என்பது எதைக் குறிக்கிறது?
ஒருவேளை உங்கள் பரிசோதனை முடிவுகள் இயல்பான மதிப்புகளைவிட மாறுபட்டிருந்தால், அது உங்களுக்கு நோய்த்தொற்று, இரத்தசோகை, அல்லது வேறேதேனும் நோய்நிலைகள் உள்ளதைக் குறிக்கிறது. உங்கள் CBC பரிசோதனையின் இயல்பற்ற முடிவுகளுக்கான காரணத்தைக் கண்டறிய உங்கள் மருத்துவர் கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ள பரிந்துரைசெய்யலாம்.
உங்கள் பரிசோதனை முடிவுகளை நீங்கள் புரிந்துகொள்ள உதவும் ஒரு சில அளவுருக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
· ஹீமோகுளோபின்: ஹீமோகுளோபின் குறைபாடு இரத்தசோகையின் அறிகுறியாக இருக்கலாம், அதிகமான ஹீமோகுளோபின் அளவு பாலிசித்தீமியாவின் அறிகுறியாக இருக்கலாம்.
· வெள்ளை இரத்த அணுக்கள் (WBC) : WBC குறைபாடு அப்லாஸ்டிக் இரத்தசோகை, இரத்தப் புற்றுநோய் மற்றும் சுயநோயெதிர்ப்பு உடல்நலக் கோளாறுகள் போன்ற நோய்நிலைகளின் அறிகுறியாக இருக்கலாம். அதிகமான WBC அளவு இரத்தப் புற்றுநோய் அல்லது இன்ஃபளமேஷன் நோய் ஏற்பட்டுள்ள அறிகுறியாக இருக்கலாம்.
· பிளேட்லெட்: பிளேட்லெட் குறைபாடு டெங்கு மற்றும் மலேரியா போன்ற பொதுவான நோய் தாக்கத்தின் அறிகுறியாகும். அதிகமான பிளேட்லெட் அளவு நாள்பட்ட நோய்தொற்றுகளின் அறிகுறியாகும்.
முடிவுரை
CBC பரிசோதனையானது உங்கள் உடல்நலத்தைப் பற்றிய முக்கியத் தகவல்களை வழங்கக்கூடிய முக்கியான கண்டறிதல் கருவியாகும். நீங்கள் ஃபிட்டாக, ஆரோக்கியமாக இருந்தாலும்கூட, உங்கள் வழக்கமான உடல்நலப் பரிசோதனையின் ஒரு அங்கமாக ஆண்டிற்கு ஒருமுறையாவது CBC பரிசோதனையைச் செய்துகொள்வது அவசியமானது. உங்கள் CBC பரிசோதனை முடிவுகள் இயல்பாக இருந்தால், நீங்கள் ஆரோக்கியமாக உள்ளீர்கள். துல்லியமான பரிசோதனை முடிவுகளைப் பெறுவதற்கு, எப்போதுமே இரத்தப் பரிசோதனையை மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் போன்ற நம்பகமான நோய்க்கண்டறிதல் லேபின் மூலம் செய்துகொள்வது கட்டாயமாகிறது. எங்களுக்கு இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளன மற்றும் உங்களின் அனைத்து நோய்க்கண்டறிதல் தேவைகளுக்கும் எங்களின் சிறப்பான, நம்பகமான சேவை காத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், எங்களின் அனைத்து சுகாதார நிபுணர்களும் அனுபவம் வாய்ந்தவர்கள், சரியான தகவல் அறிந்தவர்கள் மற்றும் திறம்பட செயல்படக்கூடியவர்கள். உங்கள் வசதிக்கேற்ப CBC பரிசோதனையைச் செய்துகொள்ள எங்களை இன்றே தொடர்புகொள்ளுங்கள்.