Language
டெங்கு காய்ச்சல்: அறிகுறிகள், காரணங்கள், ஆபத்துக் காரணிகள் மற்றும் பல தகவல்கள்
Table of Contents
கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், டெங்கு காய்ச்சல் அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கொசுக்கள் மூலம் பரப்பப்பட்டு, காய்ச்சல் போன்ற அறிகுறியையும், பல நேரங்களில் இறப்பையும் ஏற்படுத்தக்கூடிய இந்தக் காய்ச்சல் உலகின் பல பகுதிகளில் நிலவும் மிகமோசமான பிரச்சனையாக ஆகும்.
ஆனால், அதைப்பற்றி பயப்படத் தேவையில்லை. டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்களை புரிந்துகொள்ளுதல், நோய் அறிகுறிகளை கண்டறிதல், சரியான சிகிச்சையை பெறுதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தல் போன்றவற்றை சரிவரச் செய்வதன் மூலம் நம்மையும் நமது சமூகத்தையும் இந்தக் கொடிய நோயிலிருந்து பாதுகாக்க முடியும்.
டெங்கு காய்ச்சல் என்பது தீவிர வைரஸ் நோய் தொற்று ஆகும். இந்தக் காய்ச்சல் இந்தியா உட்பட பல உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகில் 40% கும் அதிகமான மக்கள், டெங்கு காய்ச்சல் சுலபமாக ஏற்படக்கூடிய பகுதிகளில் வசித்துவருகின்றனர். பல நாடுகளில் டெங்கு காய்ச்சல், நோய்கள் பலவற்றை ஏற்படுத்துவதற்கான முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
லேசான டெங்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் அதேவேளையில், தீவிர டெங்கு காய்ச்சலானது இறப்பை ஏற்படுத்தக்கூடிய அளவு மிகவும் ஆபத்தான நோய்நிலையை உருவாக்கும். ஜீக்கா, சிக்கன்குனியா மற்றும் பல வைரஸ்களைப் பரப்புவதற்குக் காரணமான பெண் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களின் கடியினால் டெங்கு ஏற்படுகிறது. இது டெங்கு வைரஸ் 1, 2, 3 மற்றும் 4 ஆகிய நான்கு தொடர்புடைய வைரஸ்களை (செரோடைப்கள் எனப்படும்) கொண்டுள்ள கொசுக்களால் பரவும் நோயாகும். இந்த வைரஸ்களில் ஏதேனும் ஒன்றால் நீங்கள் பாதிக்கப்பட்டால், உங்கள் உடல் அந்தக் குறிப்பிட்ட வைரஸை எதிர்த்து போராடும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். இருப்பினும், நீங்கள் பிற மூன்று வைரஸ்களால் பிற்காலத்தில் பாதிக்கப்படலாம். இதன் காரணமாகவே, ஒருவர் அவரின் வாழ்நாளில் ஒருமுறைக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படலாம். இந்தியாவில் காணப்படும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பெரும்பாலும் செரோடைப்கள் 2 மற்றும் 3 (DENV-2 மற்றும் DENV-3) ஆல் ஏற்படுகிறது. 2010 டெல்லி டெங்கு காய்ச்சல் நோய்தொற்று ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது டெங்கு வைரஸ் செரோடைப் 1 (DENV-1) ஆகும்.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்
டெங்கு, கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ் ஆகும். இது பின்வரும் அறிகுறிகளுடன் தீவிர காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது:
· குமட்டல் அல்லது வாந்தி
· உடம்பு முழுக்க சிவப்பான தடுப்புகள்
· தசை மற்றும் மூட்டு வலி
· உடல் வலி
· மிகுந்த தலைவலி
· அதிக காய்ச்சல்
· டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் மற்றும் உயிரிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான சிக்கல்களையும் ஏற்படுத்தலாம்.
டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள்
டெங்கு வைரஸ் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் பரவுகிறது. இக்கொசுக்கள் பெரும்பாலும் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த வைரஸ் மிதமானது முதல் தீவிர நோய் அறிகுறிகள் வரை ஏற்படுத்தலாம். அந்நோய்களில் மிகவும் பொதுவானது டெங்கு காய்ச்சல் ஆகும். டெங்கு அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, மற்றும் சிவப்பு தடுப்புகள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் என்பது இந்நோயின் தீவிர நோய்நிலையாகும். இதில் மூக்கு அல்லது ஈறுகளிலிருந்து இரத்தக்கசிவு ஏற்படுவதோடு உடலுறுப்பு செயலிழப்பும் நிகழலாம். இந்நோயின் மிகத்தீவிர நோய்நிலையான டெங்கு ஷாக் சிண்ட்ரோம் உயிரிழப்பை ஏற்படுத்தும்.
டெங்கு பரிசோதனைகள்
டெங்கு காய்ச்சல் பாதிப்பைக் கண்டறிய மருத்துவர்கள் எளிய இரத்த பரிசோதனைகளைப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பரிசோதனைகள் இரத்தத்தில் வைரல் ஆன்டிபாடிகள் அல்லது குறிப்பிட்ட ஆன்டிஜென் இருப்பதைச் சரிபார்க்கின்றன. டெங்கு காய்ச்சல் பாதிப்பை உறுதிபடுத்துவதற்கான பரிசோதனையில், டெங்கு NS1 ஆன்டிஜென் பரிசோதனை எனப்படும், விரைவான பராமரிப்புப் பரிசோதனை மிகவும் பிரபலமானது. இந்தப் பரிசோதனை காய்ச்சலை முன்கூட்டியே மற்றும் விரைவாகக் கண்டறிய உதவுகிறது. அத்துடன் டெங்கு காய்ச்சல் பாதிப்பை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பையும் அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் மருத்துவர் நோயாளிகளுக்கு ஏற்ற மருத்துவ ஆலோசனைகளை சரியான நேரத்தில் அளித்து, விரைவான தொடர் சிகிச்சைகளையும் வழங்க உதவுகிறது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 1 வாரம் ஆன நோயாளிகளுக்கு, IgM கண்டறிதல் பரிசோதனை மிகவும் பயனுள்ளது என்றபோதிலும், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட 12 நாட்கள் வரை செய்துகொள்ளப்பட்ட NS1 பரிசோதனை முடிவுகள் பாசிட்டிவாக தான் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெங்கு காய்ச்சல் பாதித்துள்ள பெரும்பாலான மக்களுக்கு இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அளவு குறைகிறது. எனவே பிளேட்லெட் அளவை கவனமாகவும், தொடர்ச்சியாகவும் கண்கணிக்க வேண்டும். கம்ப்ளீட் ப்ளட் கவுண்ட் (CBC) பரிசோதனை இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அளவு உட்பட அனைத்து முக்கிய அளவுருக்களையும் அளிக்கிறது. இப்பரிசோதனையைத் தாமதப்படுத்தாமல் சரியான நேரத்தில் செய்துகொள்ளுங்கள்.
பொதுவாக, உங்களுக்கு டெங்கு பாதிப்பு இருந்தால், டெங்கு-குறிப்பிட்ட NS1 ஆன்டிஜென், குறைவான பிளேட்லெட் எண்ணிக்கை மற்றும் குறைந்த அளவிலான மொத்த வெள்ளை இரத்த அணுக்கள் (WBC) போன்றவற்றுக்கு உங்கள் பரிசோதனை முடிவுகள் பாசிட்டிவாக இருக்கும்.
டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை
டெங்கு காய்ச்சலுக்குப் பிரத்யேக சிகிச்சை என ஒன்றும் இல்லை. டெங்கு சிகிச்சையின் நோக்கம், டெங்கு நோய் அறிகுறிகளை குறைப்பது மற்றும் வைரஸ் தொற்றை எதிர்த்து உடல் போராடுவதற்கு உதவுவது ஆகும். டெங்கு சிகிச்சையில் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
· போதுமான ஓய்வு எடுத்தல் மற்றும் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க அதிக திரவங்களை உட்கொள்ளுதல்.
· தலைவலிகள் மற்றும் தசை வலிகளிலிருந்து நிவாரணம் பெற பாராசெட்டமால் மற்றும் இபுப்ரோஃபென் போன்ற வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துதல்.
· குமட்டல் மற்றும் வாந்திக்கு மெக்லிசைன் மற்றும் புரோமெதாசின் போன்ற இயக்க நோய் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துதல்.
· காய்ச்சலைக் குறைப்பதற்கு அசெட்டமினோஃபென் அல்லது டைஃபென்ஹைட்ரமைன் போன்ற காய்ச்சல் குறைப்பான் மாத்திரைகளை உட்கொள்ளுதல்.
· எதிர்காலத்தில் கொசுக் கடியிலிருந்துத் தப்பிக்க கொசு விரட்டிகளைப் பயன்படுத்துதல்
டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க சிறந்த வழி நோய்தடுப்பே ஆகும். டெங்கு காய்ச்சலுக்கு முறையாக சிகிச்சையளித்து அதிலிருந்து மீள்வதற்கு மேலே கூறியுள்ள மருந்துகள் மற்றும் நடவடிக்கைகளைப் பயன்படுத்தப்படலாம்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு
இந்தக் கொடிய நோய் ஏற்படுவதைத் தடுக்க பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:
தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல்
உலகின் பெரும்பாலான நாடுகளில், டெங்கு தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி ஒரு ஆண்டில் மூன்று முறை அளவில் வழங்கப்படுகிறது. இருப்பினும், இத்தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள குறைந்தபட்சம் நீங்கள் ஒருமுறையாவது டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்க வேண்டும் அல்லது உங்கள் டெங்கு காய்ச்சல் பரிசோதனை முடிவு பாசிட்டிவாக இருந்திருக்க வேண்டும்.
கொசு விரட்டிகளைப் பயன்படுத்துதல்
வெளியில் உள்ளபோது, உங்கள் சருமத்தில் கொசு விரட்டித் தைலங்களைத் தடவிக்கொள்ளுங்கள். பெரும்பாலான கொசு விரட்டிகள் பின்வரும் ஆக்டிவ் மூலப்பொருட்களில் ஒன்றைக் கொண்டுள்ளன: DEET, பிகாரிடின், IR3535, எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய் (OLE), பாரா-மெந்தேன்-டியோல் (PMD), அல்லது 2-அன்டெகனோயேட்.
DEET தான் மிகவும் பொதுவான மற்றும் பயனுள்ள கொசு விரட்டி ஆக்டிவ் மூலப்பொருள் ஆகும். அதிக சதவீத DEET உள்ள கொசு விரட்டிகள், கொசுக் கடியிலிருந்து நீண்ட நேர பாதுகாப்பை வழங்குகிறது, இருப்பினும் அப்பாதுகாப்பு 10 மணி நேரத்திற்கு மேல் நீடிக்காது. பெரியவர்களுக்கு 20% முதல் 30% DEET மூலப்பொருட்கள் உள்ள கொசு விரட்டி தயாரிப்புகளையும், குழந்தைகளுக்கு 10% க்கும் குறைவான DEET மூலப்பொருட்கள் உள்ள தயாரிப்புகளையும் பயன்படுத்துங்கள். பிகாரிடின் DEET போலவே சிறப்பாகச் செயல்படும், அத்துடன் இதை இரண்டு மாதங்கள் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.
எலுமிச்சை யூக்கலிப்டஸ் எண்ணெயும் DEET போலவே சிறந்த கொசு விரட்டியாக உள்ளது, இருப்பினும் அதை 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது.
நீங்கள் ஒரு கொசு விரட்டி ஸ்ப்ரேவைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை முதலில் உங்கள் ஆடைகளில் தடவி, பின்னர் உடல் முழுவதும் தேய்க்கவும், அதனால் நீங்கள் எந்தவொரு இடத்தையும் தவறவிடமாட்டீர்கள்.
கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை ஒழித்திடுதல்
கொசுக்கள் சிறு நீர்தேக்கங்களில்கூட முட்டைகளை இடுகின்றன, முட்டைகள் பொரித்தவுடன், கொசுக்கள் ஒரு வாரத்திற்குள் இனப்பெருக்கம் செய்யத்தொடங்கும். கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க:
· பூந்தொட்டிகள், சாக்கடைகள், வாளிகள், நீச்சல் குள மூடிகள், செல்லப்பிராணிகளுக்கான தண்ணீர் பாத்திரங்கள், தூக்கியெறியப்பட்ட டயர்கள் மற்றும் தண்ணீரைத் தேக்கி வைக்கக்கூடிய வேறு எதிலும் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவதன் மூலம் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களைக் குறைத்திடுங்கள்.
· பறவை குளியல் பாத்திரங்களில் உள்ள தண்ணீரை குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது மாற்றுங்கள்.
· டயர் ஸ்விங்குகளிலிருந்து தண்ணீர் வெளியேற ஓட்டை போடுங்கள்.
· நீச்சல் குளங்களை சுத்தமாகவும், க்ளோரின் சேர்த்தும் பராமரித்திடுங்கள்.
உடலை முழுமையாக மூடக்கூடிய ஆடைகளை அணிதல்
வெளியில் செல்லும்போது, உங்கள் உடலை முழுமையாக மூடக்கூடிய ஆடைகளை அணிந்திடுங்கள். நீளக்கையுள்ள சட்டைகள், நீளமான பேண்டுகள், மற்றும் சாக்ஸூகள் போன்றவற்றை அணியுங்கள்.
கொசுக்கள் பொதுவாக அடர் நிற ஆடைகளுக்கு ஈர்க்கப்படுவதால், முடிந்தளவு வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள். திறந்த வகை செருப்பு மற்றும் ப்ளிப்-ப்ளாப் செருப்புகளுக்குப் பதிலாக, பாதங்களை முழுமையாக மூடக்கூடிய ஷூக்களை போட்டுக்கொள்ளுங்கள்.
வானிலை உகந்ததாக இருந்தால், பெர்மெத்ரின் போன்ற பூச்சிக்கொல்லியை ஆடைகளில் தெளியுங்கள். பெர்மெத்ரின் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளையும் நீங்கள் அணியலாம்.
டெங்கு காய்ச்சல் கண்டறிதல்
நோயாளிக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளின் அடிப்படையிலேயே டெங்கு கண்டறியப்படுகிறது. மருத்துவர்கள் டெங்கு வைரஸினால் ஏற்படக்கூடிய ஆன்டிபாடிகளைக் கண்டறிய இரத்தப் பரிசோதனை அல்லது டெங்கு கண்டறிதலை உறுதிப்படுத்த PCR பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். இந்த இரத்தப் பரிசோதனைகளில் டெங்கு பாதிப்பை உறுதிசெய்வதற்கான மிகமுக்கிய அளவீடு பிளேட்லெட் எண்ணிக்கை ஆகும். இந்த எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவைவிடக் குறைவாக இருக்கும்பட்சத்தில், டெங்கு பாதிப்பு உறுதியாகிறது. ஒரு சில நேரங்களில், உடலினுள்ளே இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகளைக் கண்டறிய, இமேஜிங் பரிசோதனையைச் செய்துகொள்ளவும் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
டெங்கு காய்ச்சலின் ஆபத்துக் காரணிகள்
டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு இரண்டு முக்கிய ஆபத்துக் காரணிகள் உள்ளன. அவை:
வெப்பமண்டலத்தில் வசித்தல்: டெங்கு பரவுவதற்கான மிக முக்கியமான ஆபத்து காரணி, வைரஸ் பாதிப்பு அதிகம் ஏற்படும் இடத்தில் வசிப்பது அல்லது பயணம் செய்வது ஆகும். லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கரீபியன், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா போன்ற உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. நீங்கள் இந்த இடங்களில் வசிக்கிறீர்கள் என்றாலோ செல்லப்போகிறீர்கள் என்றாலோ, நீங்கள் வைரஸால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து உள்ளது.
கடந்த காலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருத்தல்: கடந்த காலத்தில் நீங்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்து, மீண்டும் டெங்குவால் பாதிக்கப்பட்டால் உங்களுக்கு மிகவும் தீவிரமான நோய் அறிகுறிகள் உருவாகும் ஆபத்து உள்ளது. ஏனென்றால், உங்கள் உடலில் டெங்கு வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் ஏற்கனவே உருவாகியுள்ளன என்பதால் இம்முறை உங்கள் உடலில் மிகத்தீவிரமான நோய் எதிர்ப்பு செயல்பாடுகள் நடைபெறும்.
முடிவுரை
முடிவாக, டெங்கு ஒரு உயிர்கொல்லி நோயாகும். டெங்குவால் உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். டெங்கு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளை அறிந்துவைத்திருப்பது மிகவும் அவசியமாகும். அதன் மூலம், உங்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை ஆரம்பகால நிலையிலேயே கண்டறிவதோடு, தேவைப்பட்டால், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவும் முடியும்.
இத்துடன், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் டெங்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை நன்குக் குறைக்கலாம். இந்த டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம், கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் பிற நோய்களிலிருந்து உங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
உங்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாகத் தோன்றினால், சரியான நோய் கண்டறிதலுக்கு, இரத்த பரிசோதனையை மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லேப் மூலம் செய்துகொள்ளுங்கள்.









