back-arrow-image Search Health Packages, Tests & More

0%

Tamil

இதய நோய் தொடர்பான 4 இரத்த பரிசோதனைகள்: இதய ஆரோக்கியத்தை மதிப்பிடுங்கள்

8173 Views

0

இதய நோயைக் கண்டறிவதற்கான சிறந்த இதய இரத்த பரிசோதனைகள் பட்டியல்

1.  லிப்பிட் (கொழுப்பு) சுயவிவர சோதனை (லிபிட் புரோஃபைல்)

கொலஸ்ட்ரால் சோதனை என்றும் அழைக்கப்படும் இச்சோதனை இரத்தத்தில் கொழுப்பின் அளவை அளவிட்டு மாரடைப்பு, பக்கவாதம் அல்லது பிற இதய நோய் ஏற்படும் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இச்சோதனை பொதுவாக பல்வேறு அளவீடுகளை உள்ளடக்கியது:

•        மொத்த கொழுப்பு: இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறிக்கிறது. மொத்த கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது. பொதுவாக, மொத்த கொழுப்பு ஒரு டெசிலிட்டருக்கு 200 மில்லிகிராம் (mg/dL) அல்லது லிட்டருக்கு 5.2 மில்லிமோல்கலுக்குக் (mmol/L) குறைவாக இருக்க வேண்டும்.

•        உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) கொழுப்பு: "நல்ல" கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படுகிறது, இது தமனிகளை அடைப்பின்றி காத்து இரத்தம் மிகவும் சுதந்திரமாக ஓட உதவுகிறது.

•        குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) கொழுப்பு: "கெட்ட" கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இரத்தத்தில் அதிக அளவு LDL கொழுப்பு இருப்பது இரத்த நாளங்களில் உறைகட்டி படிவதற்கு வழிவகுத்து இரத்த ஓட்டம் குறைவதற்கு வழிவகுக்கும். உறைகட்டி அதிகம் படியும்போது தீவிர இதயம் மற்றும் இரத்த நாளப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

•        ட்ரைகிளிசரைடுகள்: இவை இரத்தத்தில் உள்ள மற்றொரு வகை கொழுப்பாகும், இவற்றின் அதிக அளவு இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும். ட்ரைகிளிசரைடு அளவு 150 mg/dL (1.7 mmol/L) க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

உங்களது பார்வைக்கு:

மொத்த கொழுப்பு = HDL கொழுப்பு + LDL கொழுப்பு + 20% ட்ரைகிளிசரைடுகள் அளவு

2. ஹை சென்சிடிவிடி C -ரியாக்டிவ் ப்ரோடீன் சோதனை (hs CRP சோதனை))

சி-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP) என்பது காயம் அல்லது தொற்று காரணமாக ஏற்படும் வீக்கத்திற்கு உடல் காட்டும் எதிர்வினையின் ஒரு பகுதியாகக் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் ஒரு புரதமாகும். hs-CRP சோதனையானது இரத்தத்தில் C-ரியாக்டிவ் புரதத்தின் (CRP) குறைந்த அளவைக் கண்டறிய முடியும். உயர் அளவு hs-CRP சோதனை மதிப்புகள் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இருதய நோய்க்கான அதிக ஆபத்தைக் குறிக்கிறது.

இந்த இரத்தப் பரிசோதனை நோய் அறிகுறிகளைக் காணப்படும் முன்பே இதய நோய்க்கான ஆபத்தைத் தீர்மானிக்க உதவும். hs-CRP அளவு 2.0 mg/L க்கு மேல் இருந்தால் இதய நோய் ஏற்படுவதற்கான அதிக ஆபத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், வைரஸ் தொற்று போன்ற வேறு பல சூழ்நிலைகளால் CRP அளவுகள் தற்காலிகமாக அதிகரிக்கப்படலாம். எனவே, சில நிபுணர்கள் இரண்டு வார இடைவெளியில் இரண்டு முறை சோதனை செய்யப் பரிந்துரைக்கலாம்.

hs-CRP அளவை மட்டுமே வைத்து திட்டவட்டமாக முடிவு சொல்ல இயலாது. உங்கள் மருத்துவர் மற்ற உடல்நலப் பரிசோதனைகளையும் பரிந்துரைக்கக் கூடும். இதய ஆரோக்கியத்தைப் பற்றிய ஒட்டுமொத்த தகவலைப் பெற அச்சோதனை முடிவுகளுடன் hs-CRP சோதனை மற்றும் பிற இரத்த பரிசோதனை முடிவுகளையும் இணைத்துப் பார்த்து முடிவெடுப்பார்.

3. நேட்ரியூரிடிக் பெப்டைட்ஸ் சோதனை

மூளை நேட்ரியூரெடிக் பெப்டைட் (BNP) என்பது, உடல் திரவங்களை அகற்றவும், இரத்த நாளங்களை தளர்த்தவும் மற்றும் சோடியத்தை சிறுநீரில் வெளியேற்றவும் உதவ இதயம் மற்றும் இரத்த நாளங்கள் தயாரிக்கும் ஒரு புரதமாகும். இரத்தத்தில் நுழையும் BNP அளவு அதிகரிப்பது இதயம் சேதமடைவதைக் குறிக்கிறது.

வயது, பாலினம் மற்றும் அதிக எடை ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடுவதால் வெவ்வேறு நபர்கள் சாதாரண BNP நிலைகளுக்கு வெவ்வேறு மதிப்புகளைக் கொண்டிருக்கலாம்.

இதய செயலிழப்பின் (CHF) தீவிரத்தை கண்டறிய, காரணத்தை அறிய மற்றும் மதிப்பீடு செய்ய உதவி தேவையா? உங்கள் இரத்தத்தில் உள்ள BNP அல்லது NT-pro BNP அளவை அளவிடும் NT-Pro BNP சீரம் சோதனைக்குப் பதிவு செய்யவும்.

4. மாரடைப்புக்கான ட்ரோபோனின் (டி) சோதனை

ட்ரோபோனின் (அல்லது கார்டியாக் ட்ரோபோனின்) என்பது இதய தசைகளில் காணப்படும் ஒரு வகைப் புரதமாகும். இது பொதுவாக இரத்தத்தில் காணப்படுவதில்லை மற்றும் இதய தசைகள் சேதமடையும் போது இரத்தத்தில் வெளியிடப்படுகிறது.

இரத்தத்தில் உள்ள ட்ரோபோனின் அளவைக் கண்டறிய ட்ரோபோனின் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதயத்தின் தசைகள் மேலும் மேலும் சேதமடையும்போது, அதிக அளவு ட்ரோபோனின் இரத்தத்தில் வெளியிடப்படுகிறது. இதயக் காயம் அல்லது சேதத்தைக் கண்டறிய கார்டியாக் சுயவிவரப் பரிசோதனையாக இரண்டு வகையான கார்டியாக் ட்ரோபோனின் T (cTnT) மற்றும் I (cTnI) பயன்படுத்தப்படுகின்றன. இரத்தத்தில் அதிக அளவு ட்ரோபோனின் இருந்தால், மாரடைப்பு ஏற்படவுள்ளது அல்லது சமீபத்தில் ஏற்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும்.

மாரடைப்புக்கான ட்ரோபோனின் T இரத்த பரிசோதனையை விட ட்ரோபோனின் I மிகவும் குறிப்பானது மற்றும் சிறந்த இதயநோய் குறிப்பான் என்பதைமைவுகள் அறிந்துள்ளன.இதய நோய்க்கான ஆபத்தைத் தீர்மானிக்க இதய இரத்த பரிசோதனை மட்டுமே போதாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை முறை அல்லது குடும்ப வரலாறு காரணமாகச் சிறு வயதிலேயே இதய நோயை உருவாகும் அபாயம் உள்ளதாக நீங்கள் கருதினால், மருத்துவரை அணுகி, இதய அடைப்பு மற்றும் இதய நோய்க்கான இரத்த பரிசோதனைக்குப் பதிவு செய்து கண்டறிந்து உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துங்கள்.

Talk to our health advisor

Book Now

LEAVE A REPLY

Your email address will not be published. Required fields are marked *

Popular Tests

Choose from our frequently booked blood tests

TruHealth Packages

View More

Choose from our wide range of TruHealth Package and Health Checkups

View More

Do you have any queries?