Language
ப்ரோலாக்டின் அளவு: அதிக ப்ரோலாக்டின் அளவைக் குறைப்பது எப்படி | 7 சிறந்த வழிமுறைகள்

Table of Contents
ப்ரோலாக்டின் என்பது பிட்யூட்டரி சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன் தாய்ப்பால் உற்பத்திக்குக் காரணமாகும். ப்ரோலாக்டின் இயல்பான தாய்ப்பால் சுரப்பு, பாலியல் செயல்பாடு, மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும். இருப்பினும், இரத்தத்தில் அதிக ப்ரோலாக்டின் அளவு இருந்தால், அது மார்பகப் புற்றுநோய், கருத்தரிக்க இயலாமை மற்றும் உடல்பருமன் போன்ற சில உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உங்களுக்கு அதிக ப்ரோலாக்டின் அளவு இருப்பது, உங்கள் உடலில் ஹார்மோன் சமநிலையின்மை அல்லது நோய்நிலை போன்றவை (பெண்களுக்கு PCOS முதலியன) ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறியாகும். சீரம் ப்ரோலாக்டின் பரிசோதனைகள் உங்கள் உடலில் உள்ள ப்ரோலாக்டின் அளவைத் துல்லியமாக வழங்கும். ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் ப்ரோலாக்டின் அளவு அதிகரிக்கலாம். மனஅழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் மற்றும் ப்ரோலாக்டினோமா கூட உங்கள் ப்ரோலாக்டி அளவை அதிகரிக்கத் தூண்டும் காரணிகளாகும்.
ப்ரோலாக்டி மூளையின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே செய்தியை அனுப்பி, ஒருவரின் தூக்க சுழற்சியைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்களில், ஒவ்வொரு மும்மதங்களுக்கு இடையிலும், இரத்த அளவு சுமார் 8–10% குறைகிறது. அதனால், இதுபோன்ற சமயங்களில், பெண்கள் போதுமான தூக்கம் பெறவில்லை என்றால், அது அவர்களின் உடலின் மீதான அழுத்தத்தை அதிகரித்து, அதிக ப்ரோலாக்டின் அளவை உற்பத்தி செய்கிறது.
ப்ரோலாக்டின் அளவை குறைப்பதற்கான 7 சிறந்த வழிமுறைகள்
க்ளூட்டன் உள்ள உணவுகளை தவிர்த்தல்
உங்கள் உணவில் உள்ள க்ளூட்டன் ப்ரோலாக்டின் ஹார்மோன் அளவை அதிகரிக்கும் என்பதால், அதை உட்கொள்ளாமல் தவிர்ப்பது, உங்கள் ப்ரோலாக்டின் அளவை குறைக்க உதவும். கோதுமை, கம்பு, மற்றும் பார்லி போன்ற உணவுகளில் க்ளூட்டன் அதிகமாக உள்ளது. இவற்றை உண்ணும் போது உடலில் இன்ஃப்ளமேட்டரி எதிர்வினை ஏற்படுகிறது. இதனால் உடலில் ப்ரோலாக்டின் அளவு அதிகரித்து, ஹைபோதலாமஸில் உருவாகக்கூடிய டோபமைன் உற்பத்தி சீர்குலைகிறது. அதனால்தான், க்ளூட்டன் உள்ள உணவுகளை உட்கொள்ளாமல் தவிர்ப்பது, ப்ரோலாக்டின் அளவைக் குறைப்பதற்கான மிகச்சிறந்த வழியாக கருதப்படுகிறது.
மது அருந்துவதை தவிர்த்தல்
மது அருந்துவதால் ஏற்படும் டோபமைன் உற்பத்தி மாற்றத்தினால், உடலில் உள்ள ப்ரோலாக்டின் அளவு அதிகரிக்கக்கூடும். ஆரோக்கியமாக வாழ்வதற்கு எப்போதுமே அதிகப்படியான மது அருந்துவது பரிந்துரை செய்யப்படுவதில்லை, அதிலும் குறிப்பாக உங்களுக்கு அதிக ப்ரோலாக்டின் அளவு இருக்கும்பட்சத்தில் நீங்கள் நிச்சயமாக மது அருந்துவதை தவிர்த்திட வேண்டும். உங்களுக்கு அதிக ப்ரோலாக்டின் அளவுகள் உள்ளதென்றால், உங்களுக்குப் பிடித்த உணவுடன் எப்போதாவது பீர் அருந்தலாமா இல்லையா என்பதை அறிய உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
வைட்டமின் E மற்றும் வைட்டமின் B6 சப்ளிமெண்ட் மாத்திரைகள்
குறைவான ப்ரோலாக்டின் அளவு உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பொதுவாக வைட்டமின் E மற்றும் வைட்டமின் B6 சப்ளிமெண்ட் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள், ஏனென்றால், வைட்டமின் B6 டோபமைன் உற்பத்திக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் E இயற்கையாகவே இரத்தத்தில் உள்ள ப்ரோலாக்டின் அளவைக் குறைக்கிறது.
இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைத்தல்
ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பது உங்கள் ப்ரோலாக்டின் அளவை குறைக்க உதவுகிறது. கொழுப்பு அமில அளவு அதிகரிப்பு, குறைந்த இன்சுலின் ஏற்பிகள் அல்லது இன்சுலின் பிணைப்பில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக குளுக்கோஸ் உணர்திறன் குறைபாடனது அதிக ப்ரோலாக்டின் அளவை ஏற்படுத்துகிது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
இனிப்பான பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மற்றும் அதிக சர்க்கரை அளவு கொண்ட உணவுகளை தவிர்த்திடுங்கள். அத்துடன், உங்கள் உணவில் போதுமான புரதம் மற்றும் நார்ச்சத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த ஆரோக்கிய நடைமுறைகள், உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுவதுடன் ப்ரோலாக்டின் அளவையும் குறைக்கிறது. உங்கள் இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்கக்கூடிய ஒரு சில உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- ப்ரக்கோலி
- பூசணி மற்றும் பூசணி விதைகள்
- கடல் உணவுகள்
- வெண்டைக்காய் Okra
- பீனட் பட்டர்
- பீன்ஸ்கள்
- பருப்பு வகைகள்
- பெர்ரி பழங்கள்
- கேல் காய்கறி
- ஆளி விதைகள்
அதிதீவிர உடலுழைப்பு உள்ள உடற்பயிற்சியை தவிர்த்தல்
அதிக ப்ரோலாக்டின் அளவு உள்ளவர்கள் அதிதீவிர உடலுழைப்பு தேவைப்படும் உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். நிதானமான, மெதுவான உடல் அசைவுகளை கொண்ட உடற்பயிற்சிகளை செய்வது ப்ரோலாக்டின் அளவைக் குறைவாக வைத்திருக்க உதவும். உங்களுக்கு அதிக ப்ரோலாக்டின் இருந்து, நீங்கள் அதிதீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
மனஅழுத்தத்தை தவிர்த்தல்
அமைதியாக இருந்தால் உங்கள் உடம்பில் தானாகவே குறைவான ப்ரோலாக்டின் மட்டுமே சுரக்கும். உங்களுக்கு அதிகமான மனஅழுத்தம் இருப்பதால், உங்கள் உடலில் உற்பத்தி செய்யப்படும் அதிக கார்டிசாலானது ப்ரோலாக்டின் அளவை அதிகரிக்கச் செய்யும். இரவு அதிக நேரம் தூங்குவது, சீரான இடைவெளிகளில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது, தியானம் செய்வது மற்றும் தீவிரம் குறைந்த உடற்பயிற்சிகளை செய்வது போன்ற மனஅழுத்தத்தை குறைக்கக்கூடிய செயல்பாடுகளில் ஈடுபடுவது தீவிர மனஅழுத்தத்தை திறம்படக் குறைத்து உங்களுக்கு ஏற்பட்டுள்ள அதிக ப்ரோலாக்டின் அளவை சீர்செய்யும். உங்கள் வேலை அதிக மனஅழுத்தம் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் அடிக்கடி சீரான குறுகிய கால இடைவெளிகளை எடுத்துக்கொள்ள ஒருபோதும் மறவாதீர்கள்.
அசௌகரியமான ஆடைகள் அணிவதை தவிர்த்தல்
உங்களுக்கு அதிக ப்ரோலாக்டின் இருந்தால், நீங்கள் கண்டிப்பாக உடலினை மிகவும் இறுகப்பற்றிக்கொள்ளக்கூடிய ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், மிகவும் இறுக்கமான மற்றும் அசௌகரியமான ஆடைகளை அணிவது உங்கள் முளைக்காம்புகளைத் தூண்டி அதிக ப்ரோலாக்டின் உற்பத்திக்கு வழிவகைசெய்கிறது.
முடிவுரை
ப்ரோலாக்டின், பெண்களில் தாய்ப்பால் உற்பத்தி மற்றும் பிற இனப்பெருக்க செயல்பாடுகள் செய்வதற்குக் காரணமான ஹார்மோனாக உள்ளது. அதிக ப்ரோலாக்டின் அளவு உடல் எடை இழப்பதில் சிரமம், கருவுறுதல் பிரச்சினைகள் மற்றும் மனநிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
உங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க ஊட்டச்சத்துமிக்க மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவது அவசியம். உங்கள் இரத்தின் சர்க்கரை அளவு சீராக இல்லை என்றால், அது உடலிலுள்ள அழுத்தத்தை அதிகரித்து, அதிகப்படியான கார்டிசால் உற்பத்தியை ஏற்படுத்தும். வைட்டமின் B6 உட்கொள்வது, ஹைபோதாலமஸில் டோபமினெர்ஜிக் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் உடலில் உள்ள ப்ரோலாக்டின் அளவை இயற்கையாகவே குறைக்கிறது. உடல் பருமன் ப்ரோலாக்டின் அளவை அதிகரிப்பதற்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க காரணியாகும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும், ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்ப்பதும் உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதற்கு சிறந்த வழிகளாகும்.
ஆரோக்கியமாக வாழ்வதற்கும், இரத்தத்தில் சரியான ப்ரோலாக்டின் அளவை பராமரிக்கவும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் நல்ல பழக்கவழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுதல் மிகவும் அவசியமாகும். இங்குக் கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்கள் உங்கள் இரத்தத்தில் உள்ள ப்ரோலாக்டின் அளவை சீராக்கும் உதவும். உங்கள் ப்ரோலாக்டின் அளவு பற்றி உங்களுக்கு எதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகலாம். நீங்களாகவே உங்கள் ப்ரோலாக்டின் அளவை அறிந்துகொள்ள விரும்பினால், மெட்ரோபோலிஸ் ஹெல்ப்கேர் சேவையைத் தொடர்புகொள்ளவும்.